உயர்நிலை 1

 இராபிள்ஸ் கல்வி நிலையம் தமிழ் - இணையம் வழி கற்றல். ஜூலை 2008  

பின்வரும் கருத்தறிதல் பகுதியைக் கவனமாகப் படித்துவிட்டு,வினாக்களுக்கு விடைதருக.  

தசாவதாரம்        

     இது கமலகாசனின் பத்து அவதாரங்களைப் பற்றிய படம்.  அந்த ஆரம்ப 10 நிமிடங்கள் அசத்தல். ஆனால் மற்றபடி படம் முழுவதும் ஓட்டமும் துரத்துதலுமாகவே முடிகிறது.              கி பி 12ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனிடம் இருந்து, பெருமாளைக் காப்பாற்ற முடியாமல் கடலுக்கடியில் மடிகிறார் நம்பி. பிறகு அமெரிக்காவில் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமியால் கண்டுபிடிக்கப்படும் உயிர்க்கொல்லி கிருமியைக் கவர்ந்து தீவிரவாதிகளிடம் விற்க, அமெரிக்க வில்லன் கமல் . துருத்தி வருகிறார்.              பல குளறுபடிகளைக் கடந்து அந்த கிருமி சிதம்பரம் வந்து, பாட்டி கமல் கையில் கிடைக்கிறது. பிறகு கிளைமாக்சில் டிசம்பர் 26, 2001ல் நடந்த கடல் பேரலை, இந்த கிருமிக்கொல்லி மருந்திடம் இருந்து மக்களைக் காப்பாற்றவே தோன்றியது என்று கதை விட்டு படத்தை முடிக்கிறார்கள்.              கமலின் இந்த அவதாரங்கள், முன்பு அவர் நடித்த பல படங்களை நமக்கு நினைவூட்டுவனவாக அமைகின்றன. அவ்வை சண்முகி, இந்திரன் சந்திரன், எனக்குள் ஒருவன், ஜப்பானிய கமல் என்று பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றன. படத்தில் நம்மை கவரும் முக்கிய பாத்திரங்கள் 3 மட்டுமே . அவை நம்பியின்  மிரட்டும் நடிப்பு, பல்ராம் நாயுடுவின்  நகைச்சுவை நடிப்பு, மிக முக்கியமாக வின்சென்ட் பூவராகனின் குமுறும் கோபம் ஆகியவற்றில் நாம் முதிர்ந்த கமலின் நடிப்பைக் கண்டு மகிழலாம்.              உடல் மட்டுமல்லாமல் குரலிலும் கமல் பல ஜாலங்களைக் கொண்டு வந்து யாருடைய குரல் என்று அடையாளம் காணமுடியாத அளவில் மிரட்டுகிறார் கமல். அந்த குரல்களில் எப்படி பத்துவிதமாக மாற்றி பேசுகிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  ஜப்பான் அமெரிக்கா நாட்டின் சாயலில் இறுதிச்சண்டை காட்சி  செம சூடுபறக்கிறது. படத்தில் கமல் வரும் இடங்களைத் தேடியே, இந்த ஆள் கமலா? அல்லது வேறு ஆள? என்று நாம் யோசித்து முடிக்கும் முன்னறே, அந்தப் பாத்திரம் காணாமல் போய்விடுகிறது.             ஒரு கதை வழக்கமான காமெடி, ஆக்சன், சைவ வைணவ விவகாரம், பயோவார், ஜாஜ்ர்  பூஸின் அச்சுப்பிச்சு, மணல் கொள்ளை, இயற்கை சீற்றம் எனப் பல தளங்களில் ஓடுவதால் நமக்கு குழப்பம் உண்டாவது திண்ணமே. பல்லாயிரம் உயிர்களைப் பழி கொண்ட சுனாமியை இப்படியும் அணுகலாம் என்பதே ஒரு புதுமைதான்.              ஒன்றுக்கு பத்தாக வரும் கமலுக்குத் தீனி போடுவதில் கவனத்தைச் செலவிட்டதால் தான் கதையில் போதுமான கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறத் தோன்றுகிறது. இருப்பினும் நம்பியின் நடிப்பாளுமை, சமுதாயப் போராளி வின்சென்ட் பூவராகவனின் புயல் கோபம், பத்து கேரட்டர்களின் விதவிதமான குரல்  மாற்றம் என கமல்காசனின் உழைப்பு சம கால தமிழ் சினிமாவின் பிரமிப்பு.  கீழ்க்காணும் வினாக்களுக்கு உன் சொந்த நடையில் விடை எழுதவும்.

 1. 2001 ஆம்  ஆண்டு, நடந்த கடல் பேரலை அழிவு ஏற்படக் காரணம் என்ன ?  

 
 
 
 

 2. கமலின் அவதாரங்களை நினைவு படுத்துவன யாவை?  

 
 
 
 

 3. நம்மால் ஏன் வியப்படையாமல் இருக்க முடியாது?

 
 
 
 

4. படத்தின் கதையில் குழப்பம் தோன்றாமல் இருக்க என்ன நடந்திருக்க வேண்டும்?

 
 
 
 

 5.  கமலகாசன் என்ன திறமைகளை இப்படத்தில் காட்டியுள்ளார்?

 
 
 

    முற்றியது.

 

No Responses to “”

No comments yet

Leave a Reply


Bad Behavior has blocked 1 access attempts in the last 7 days.